*புதுச்சேரி…நீட் விவகாரம்…ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர்.குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீசார்..*
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்காக ஆளுநர் மாளிகை நோக்கி வந்த போராட்டக்காரர்களை
500 மீட்டர் முன்னதாக அஜந்தா சிக்னல் அருகே போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்தனர்.
போலீசார் தடுத்தாலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் என மாணவர்கள் தெரிவித்ததால் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் மாணவர்கள் அங்கேயே அமர்ந்து கோஷமிட்டனர்
மேலும் போலீசாரின் தடுப்புகளை மீறி ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். ஒரு கட்டத்தில் அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கிய போது ஒருவரை ஒருவர் பிடித்து கொண்டனர்.இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று போலீசார் வேனில் ஏற்றினார்கள்..இதனால் அப்பகுதியில் அரைமணி நேர பரபரப்பு காணப்பட்டது..


