ஜோதிப்பிழம்பாக காட்சியளிக்கும் அண்ணாமலையார் தரிசனம்
மலையில் உச்சியில் ஜோதிப்பிழம்பாக காட்சியளிக்கும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த சூரிய பகவான்….

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அண்ணாமலையார் மலை உச்சியில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் ஏற்றப்படும். ஒவ்வொரு நாளும் தீபகொப்பரையில் நெய் நிரப்பி காடா துணிகள் பயன்படுத்தி சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபமானது ஏற்றப்படும்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்றிய மகா தீபம் இன்று காலை வரை மலை உச்சியில் ஜோதிப்பிழம்பாக அண்ணாமலையார் காட்சி தந்தார்.
அப்பொழுது சூரிய பகவான் மெல்ல மெல்ல மேலே எழுந்து வந்து ஜோதிப்பிழம்பாக இருந்த அண்ணாமலையாரை பார்த்து தரிசனம் செய்தார். இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


