பெண் விவசாயி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவி..
புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருதாளர் வேளாண் விஞ்ஞானி வேங்கடபதி.
இவர் நன்கு விளைச்சல் தரும் சவுக்கு, கனகாம்பரம் உட்பட பல்வேறு பயிர்களை உருவாக்கியுள்ளார்.
இவரின் வழியில் மகள் விவசாயி ஸ்ரீலட்சுமியும் விவசாயிகளுக்கு பலன் தரும் பயிர்களை உற்பத்தி செய்து வருகிறார்.
தற்போது விரைவாக மகசூல் தரும் மிளகு பயிரை கண்டுபிடித்துள்ளார். பொதுவாக மிளகு பயிர் செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பின் 15 அடிக்கு செடி வளர்ந்த பின்புதான் காய்கள் தர தொடங்கும். இந்த 5 ஆண்டுகளால் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பலன் இருக்காது.
இந்த நிலையில் திசுவளர்ப்பு மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 18 மாதத்தில் மகசூல் தரும் மிளகை ஸ்ரீலட்சுமி கண்டறிந்துள்ளார்.

இந்த செம்பயத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விவசாய உற்பத்தியில் இந்திய தலைக்கன ஒரு இடத்தை வைத்துள்ளது அந்த அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆராய்ச்சி செய்துள்ள பெண் விவசாயியை பாராட்டியதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்…


