in

காவல்துறையினர் அலட்சியம் விவசாயிகள் சாலை மறியல்

காவல்துறையினர் அலட்சியம் விவசாயிகள் சாலை மறியல்

 

மின் மோட்டார் திருடர்களை அடையாளம் காட்டியும் கைது செய்யாமல் காவல்துறையினர் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டி உளுர் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அலுவலகம் செல்பவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் உளுர் குலமங்களம், மடிகை, சின்ன பொன்னாப்பூர், பெரிய பொன்னாப்பூர், தும்பத்திக்கோட்டை, கோவிலூர், உள்ளிட்ட சுற்று வட்டார 18 கிராமங்களில் ஆழ்குழாய் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அடிக்கடி மின் மோட்டார்கள் திருடப்பட்டு வருகிறது.

சுமார் 50 க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் திருட்டு போய் உள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதுக்குறித்து விவசாயிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்து விவசாயிகள் ஒன்று இணைந்து இரவு நேரத்தில் காவல் காத்து திருடர்களை கண்டறிந்து காவல் நிலையத்தில் அடையாளம் சொல்லி உள்ளனர்.

இருந்த போதிலும் காவல் துறையினர் திருடர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி தஞ்சை பட்டுக்கோட்டை இடையிலான சாலையில் உளுர் அருகே விவசாயிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அலுவலகம் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

What do you think?

400 ஆண்டுகள் பழமையான மகாகாளியம்மன் கோவில் உற்சவருக்கு கும்பாபிஷேகம்

நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் சிசிடிவி வீடியோ காட்சி