in

ரவுண்ட் டேபிள் சார்பில் அரசு மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் நன்கொடை

ரவுண்ட் டேபிள் சார்பில் அரசு மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் நன்கொடை

 

ரவுண்ட் டேபிள் சார்பில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டர் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் நன்கொடையாக வழங்கப்பட்டது.

பாண்டிச்சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் 167 சார்பில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான அதிநவீன வென்டிலேட்டர் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்தப்படும் இந்த வென்டிலேட்டர், அவசர மற்றும் உயிர் காக்கும் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மேம்பட்ட சுவாச ஆதரவை வழங்கும்.

வென்டிலேட்டர் வழங்கும் நிகழ்வில் மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் உதய சங்கர், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜோசப் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தை ரவுண்ட் டேபிள் தலைவர் மோத்தி குமார், செயலாளர் பாலாஜி, பொருளாளர் ஜெயந்த், துணைத் தலைவர் முரளி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடரமணி, விளம்பர ஒருங்கிணைப்பாளர்கள் கெவின், பால விஸ்வேஷ் மற்றும் ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் இணைந்து செயல்படுத்தினர்.

இந்த நன்கொடை மூலம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை வசதிகள் மேலும் வலுப்பெறும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What do you think?

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்த்தவும். மூடிக்கிடக்கும் மருத்துவ நிலையங்களை திறக்கவும் அரசு தீவிர நடவடிக்கை தேவை

சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் தர்ணா