in

அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவிற்கான கம்பம் ஊண்டும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவிற்கான கம்பம் ஊண்டும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கிராம கோவிலில் ஒன்றான அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா அடுத்த மாதம் 14ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. திருவிழாவின் முதல் துவக்கமாக கோவில் முன்பாக கம்பம் ஊண்டும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்காக கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் பூசாரியை மேளதாளத்துடன் அழைத்து வந்து கோவில் முன்பாக கம்பம் உண்டப்பட்டது. தொடர்ந்து கம்பத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.

What do you think?

100 நாள் வேலைத்திட்டம்: மோடி அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

விபி ராம்ஜி திட்டத்தை திரும்ப பெற மறியல் போராட்டம்