in

விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலையில் சாலை மறியல்

விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலையில் சாலை மறியல்

 

விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலையில் தொடர் விபத்து ஏற்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தாசலம் – சிதம்பரம் சாலையில் பொன்னேரி அருகே புறவழிச் சாலையில் ரவுண்டானா உள்ளது இந்த வழியாக விருத்தாசலம் – சிதம்பரம், கடலூர் – சேலம், கடலூர் – திருச்சி செல்லும் வாகனங்கள் இந்த வழியாக சென்றடைகிறது.

இந்த நிலையில் இந்த ரவுண்டானா பகுதியில் தொடர் விபத்து ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்தனர்.

பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் விருத்தாசலம் சிதம்பரம் செல்லும் சாலையில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

What do you think?

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம்