விருத்தாசலம் அருகே கோபாலபுரத்தில்,அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
கடலூர் மாவட்டம் ,விருத்தாசலம் அருகே கோபாலபுரத்தில், அன்னை இந்திரா தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு விநாயகர் ,மதுரை வீரன் உடனுறை பொம்மி அம்மாள் வெள்ளையம்மாள் ,அருள்மிகு மலையாள கருப்புசாமி, மகா சக்தி மாரியம்மன், காத்தவராயன் சுவாமி, பாலமுருகன், சப்த கன்னிகள் சிம்மம் மற்றும் பலிபீடம் மற்றும் கோபுர விமானத்திற்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக,கோவில் முன்பு அமைக்கப்பட்ட ஏக சாலையில் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளத்துடன் கடம் புறப்பாடு துவங்கி,கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு,சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.அதன் பிறகு,பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது .
இந்த கும்பாபிஷேகத்தினை ஐந்து கொத்து வகையறாக்கள் மற்றும் அன்னை இந்திரா தெரு ஊர் பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை திரளான பொதுமக்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.


