பள்ளியில் சேர்ந்த மழலைகளுக்கு உற்சாக வரவேற்பு! மாலை அணிவித்து ‘அ’ எழுத வைத்த பள்ளி நிர்வாகம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரநாதர் வீதியில் காஞ்சிபுரத்தின் முக்கிய பள்ளியான பிரபல சோழன் தனியார் பள்ளி 1996 முதல் செயல்பட்டு வருகிறது.சிறந்த கல்வி மற்றும் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்ற பள்ளியென போற்றபடுகின்றது.

கோடை விடுமுறைக்கு பின் கடந்த ஜூன் நான்காம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று எல்கேஜி சேர்க்கை விழா வெகு சிறப்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் காயத்ரி மற்றும் தயாளன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றதில் பள்ளியின் தாளாளர் சஞ்சீவி ஜெயராம் பங்கேற்று பள்ளியின் நுழைவாயிலில் மாலைகளுக்கு எழுதுகோல் உபகரணங்கள் வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து குத்து விளக்கேற்றி சேர்க்கை விழாவை துவங்கி, மழலைகளின் பள்ளி தொடக்கம் குறித்தும் அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணம் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் பெற்றோருடன் அமர்ந்திருந்த மழலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி அரிசியில் “அ” எழுத வைத்து அவர்களது முதல் படிப்பை துவங்கி பள்ளியின் தாளாளர் சஞ்சீவி ஜெயராம், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியை ஆசிரியர்களுடன் உற்சாக வரவேற்பு வழங்கினார்.
இந்த சேர்க்கை விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் தங்கள் மழலைகளை பள்ளியில் சேர்த்து அவர்களது படிப்பு துவக்கத்தை மகிழ்ச்சியுடன் தொடங்கினர்.


