in

 500 டன் இரும்பில் 7 மாடி IT கோட்டை! தஞ்சையில் பிரம்மாண்ட சாதனை

 500 டன் இரும்பில் 7 மாடி IT கோட்டை! தஞ்சையில் பிரம்மாண்ட சாதனை

தஞ்சையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த ஹம்சவர்தன் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு ஐடி கம்பெனிகளில் பணியாற்றியவர். 2016 ம் ஆண்டு தஞ்சைக்கு திரும்பியதும் சொந்த ஊரான தஞ்சையில் 10க்கு 10 சதுர அடியில் ஒரே ஒரு பணியாளருடன் ஐடி நிறுவனத்தை துவங்கியவர்.

 

இன்று தஞ்சையில் பல்வேறு கட்டிடங்களில் 1000 பணியாளர்களை கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட வெளிகளில் சுகாதார பணிகளில் ஈடுபட்டு வரும் ஹம்சவர்தன்

தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு எதிரே 63 ஆயிரம் சதுர அடி நிலத்தில் ஐடி பார்க் கட்டிடத்தை கட்டியுள்ளார்

இந்த கட்டிடத்தில் கருங்கற்களோ, சிமெண்ட்டோ எதுவும் பயன்படுத்தாமல் உயர்தர இரும்பை பயன்படுத்தி கட்டியுள்ளார் இந்த கட்டிடத்திற்கு அமெரிக்கா ஆர்க்கிடெக் கலை வல்லுனர்களால் சிறந்த கட்டிடம் என்று சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறினார் தனது சொந்த மண்ணான தஞ்சையை நேசிக்கும் ஹம்சவர்தன்

1000 ஆண்டுகளுக்கு மேல் காலத்தால் அழியாத கற்கோயிலான உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கும் அடுத்ததாக ஸ்ராங்காக நிற்கப்போகிறது இந்த 500 டன் எஃகு கோட்டை

What do you think?

தொடர் மின்வெட்டு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக கூறி காலி குடங்களுடன் பெண்கள் பொதுமக்கள் கும்பகோணம் தஞ்சாவூர் இடையிலான சாலையில் மறியல் போராட்டம்

ராமாபுரம் பகுதியில் மின்தடை பிரச்சனை: தெருவில் திரண்ட பொதுமக்கள்