in

மயிலாடுதுறையில் தேசிய ஆயுஷ் மாநாடு!

மயிலாடுதுறையில் தேசிய ஆயுஷ் மாநாடு!

பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனம் சார்பில் மயிலாடுதுறையில் நடைபெற்ற தேசிய ஆயுஷ் மாநாட்டில், தென்னிந்தியாவின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் உள்ள பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடம் சார்பில், தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்தின் நூற்றாண்டு விழா, தருமபுரம் ஆதீனம் ஆயுஷ் மருத்துவ மற்றும் கல்வி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பியூஷதாரா 2026 தேசிய கருத்தரங்க மாநாடு என முப்பெரும் விழாவாக தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் ஆயுஷ் மருத்துவம் மற்றும் கல்வி மையத்துடன் இணைந்து தமிழ்நாடு விஷ்வ ஆயுர்வேத பரிஷத் நடத்திய நிகழ்ச்சியில், பாரம்பரிய மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, விழா மலரை வெளியிட்டு ‘பாரம்பரிய சித்த மருத்துவமும், ஆரோக்கியமான வாழ்வியலும்” என்ற தலைப்பில் அருளாசி வழங்கி பேசினார்.

அவர் கூறுகையில், இயற்கை வழியிலான உணவும், சத்தான வாழ்வியல் முறைகளுமே நோயற்ற வாழ்க்கைக்கு அடிப்படையாகும். அதிக விளைச்சல் வேண்டும் என்ற காரணத்துக்காக ரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கும் விளைபொருள்களை பயன்படுத்துவதாலேயே நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறோம். தருமபுரம் ஆதீனத்தில் அளிக்கப்படும் ஆயுஷ் சிகிச்சை முறையை பார்வையிட்ட ஜப்பான் நாட்டினர் அவர்கள் நாட்டிலும் ஆயுஷ் மருத்துவமனைகளை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்றார்.

What do you think?

மயிலாடுதுறை அருகே குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம்

பேரிகார்டு அமைத்துக் காவல்துறையினர் தீவிர எச்சரிக்கை