in

சிதம்பரம் அருகே 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் என சாலை மறியலில்

சிதம்பரம் அருகே 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் என சாலை மறியலில்

சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தில் புலியடி, காலவா மேடு, பகுதியில் 150 க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் இரண்டு தெருக்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி கவரப்பட்டு சிதம்பரம் செல்லும் சாலையில் காலி குடங்களை சாலையில் வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வரி வசூல் செய்யும் நிலையில் சரியான முறையில் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கவில்லை எனவும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி வந்து குடிக்கக்கூடிய சூழல் நிலவி வருவதாகவும்.

குறிப்பாக மற்ற தெருக்களில் குடிநீர் சரியாக வருவதாகவும் தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்கள் வசிக்கும் இந்த இரண்டு தெருக்களிலும் குடிநீர் வழங்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றம் சாட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தினசரி கூலி தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் அரசு பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள் பணிகளுக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வந்தது.

மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த அண்ணாமலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர் இதனை அடுத்து சுமார் அரை மணி நேரம் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

What do you think?

மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழி முருகன் கோவிலில் வைகாசி சதய திருவிழா தேரோட்டம்

ஆய்வு செய்ய வந்த இடத்தில் செல்ஃபி, ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டிய மீன்வளத்துறை அமைச்சர்