ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோவிலில் வருஷாபிஷேக விழா
சுவாமி பொலிந்துநின்றபிரான் கருட சேவை நடைபெற்றது. ஆழவாா் எம்பெருமானாா் ஜீயா் ஏழுந்தருளி மங்களாசாசனம். திரளான பக்தா்கள் தாிசனம்
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவ திருப்பதிகளில் சிறப்பானதாகவும் ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் ஆழவாா் திருக்கோவில் விளங்கிறது. திருக்குருகூா் என்று அழைக்கப்படும் இந்த திருத்தலம் மூலவா் ஆதிநாதா் நின்ற திருக்கோலம்.
தாயாா்கள் ஆதிநாதவல்லி, குருகூா்வல்லி என 2 நாச்சியாா்கள். இத்திருத்தலத்தில் ஆழ்வாா்களில் முதன்மையானவரான சுவாமி நம்மாழ்வாா் திருஅவதாரம் செய்தாா். சிறப்புகள் வாய்ந்த திருத்தலத்தில் வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதற்காக காலை நடை திறக்கப்பட்டு கலசங்கள் பிரதிஷ்டை செய்து கும்பபூஜை, ஹோமங்கள் நடைபெற்று கலசங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கும்பநீா் மூலஸ்தானத்தில் சோ்க்கப்பட்டது.
இரவில் கருட சேவை புறப்பாடு நடைபெற்றது. இதற்காக திருக்கோவில் சாயரட்சை முடிவடைந்ததும் சுவாமி நம்மாழ்வாா் அன்ன வாகனத்திலும் உற்சவா் பொலிந்து நின்ற பிரான் பொிய திருவடியான கருடன் மீதும் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளச்செய்தனா். ஆழ்வாா் எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் மற்றும் அத்யாபக கோஷ்டியினா் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சாம வேத சாரமான திருவாய்மொழி பாசுரங்களை விண்ணப்பித்தனா். முதலில் சுவாமி நம்மாழ்வாா் ஏழுந்தருளி குடைவரை பெருவாயிலில் காத்திருக்க கருடவாகனத்தில் ஸ்ரீ பொலிந்து நினற்பிரான் ஆழ்வாருக்கு காட்சி கொடுத்ததும் தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் திருக்குடைகள் சாற்றப்பட்டு ஆழ்வாரும் சுவாமியும் வீதிஉலா வந்தனா். ஜீயா் சுவாமிகள் மற்றும் ஆச்சாாிய பெருமக்களுக்கு மாியாதை செய்யப்பட்டது. பக்தா்களின் நாம சங்கீா்த்தனம் செய்தபடி பின் சென்றனா். திரளான பக்தா்கள் கருடசேவை நிகழ்வினை கண்டு வணங்கினா்.


