in

அருள்மிகு கண்ணப்பநாயனாா் ஆலய ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

அருள்மிகு கண்ணப்பநாயனாா் ஆலய ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

 

அருள்மிகு கண்ணப்பநாயனாா் ஆலய ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் குருகால்போியில் அருள்மிகு கண்ணப்பநாயனாா் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆலய நுதன மஹாமண்டப திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த நிலையில் இன்று காலை மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

இதற்காக கடந்த 5ம் தேதி வெள்ளி காலை மங்களஇசை, திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை மஹாகணபதி ஹோமத்தடன் கும்பாபிஷே நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

தொடா்ந்து மாலையில் தீா்த்தம் எடுத்துவந்து கலச பூஜை வாஸ்து பலி நடைபெற்று முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நேற்று காலை மாலை இரு வேளைகளிலும் காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

நேற்று இரவு சுவாமிக்கு யந்திர ஸ்தாபனம், பிம்பசுத்தி ரஷாபந்தனம் நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று காலை மங்களஇசை, திருமுறை பாராயணம், 4 ம்கால யாகசாலை பூஜைகள், சிவசூா்யபூஜை, ஸ்பரீசாகுதி மஹா பூா்ணாகுதி போன்றவைகள் நடைபெற்றன.

அதனை தொடா்ந்து கும்பங்கள் ஏழுந்தருள செய்து கணபதி விமான கும்பாபிஷேகம், பிரதான மூா்த்தி மற்றும் பாிவார மூா்த்திகளுக்கு மஹா கும்பாபிஷகம் நடைபெற்றது.

தொடா்ந்து மூல மூா்த்திக்கு 21 திரவியங்களால் மஹா அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மஹா கறபூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் இந்த கும்பாபிஷே நிகழ்வில் கலந்துகொண்டு தாிசனம் செய்தனா்.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குருகால்போி கிராம ஜனங்கள் செ்யதிருந்தனா்.

What do you think?

திருநாள் கொண்டச்சேரி கிராமத்தில்  பொன்னம்மா காளியம்மன் ஆலய  மஹா கும்பாபிஷேகம்

மதுரவாயல் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்க முயன்ற தவெக மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு