in

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற மணிமுருகன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற மணிமுருகன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மணி முருகன் என்ற டப்பா மணி என்பவர் மூன்று பேர் கொண்ட கும்பலுடன் காரில் கடத்தி சென்ற சம்பவத்தால் பரபரப்பு மாணவி  கடத்தப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை கடத்தல் கும்பலை காவல்துறை கைது செய்யாததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கடத்தப்பட்ட மாணவியின் தாய் மற்றும் பாட்டி கண்ணீர் மல்க அழுது புரண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

    

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடக்கு புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து கருப்பன் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார் அவரது மனைவி இசக்கியம்மாள் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை இதில் மூத்த பெண் குழந்தை 17 வயதானவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் முத்துக்கருப்பன் தனது மகளை மேற்படிப்பிற்காக கல்லூரி படிப்பு படிப்பதற்காக சாயர்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்த்துள்ளார்

இந்த நிலையில் முத்துக்கருப்பனிடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கையாளாக வேலை பார்த்த ஸ்ரீவைகுண்டம் கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த 33 வயதான மணி முருகன் என்ற டப்பா மணி கடந்த ஒன்றாம் தேதி மாலை வீட்டில் இருந்து கடைக்கு சென்ற முத்துக்கருப்பனின் மகள் 12 ஆம் வகுப்பு மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பளுடன் டாடா இண்டிகா காரில் கடத்தி சென்றுள்ளார்

இதைத் தொடர்ந்து முத்து கருப்பன் இந்த சம்பவம் தொடர்பாக தனது மகளை கடத்திச் சென்ற மணி முருகன் என்ற டப்பா மணி மீது ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இந்த புகாரை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் மாணவியை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்துள்ளனர் ஆனால் கடந்த மூன்று நாட்களாகியும் கடத்தப்பட்ட மாணவியை கண்டுபிடிக்கவும் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் முத்துக்கருப்பன் மற்றும் இசக்கியம்மாள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து உடனடியாக கடத்தப்பட்ட தங்களது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

களத்தில் ஈடுபட்ட மணி முருகன் உள்ளிட்ட மூன்று பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் கடத்தலில் ஈடுபட்ட மணி முருகனின் தொலைபேசி இணைப்பும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தனது மகளுக்கு என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை எனவே எங்களுக்கு அச்சமாக உள்ளது காவல்துறையினர் விரைந்து இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தனது மகளை மீட்டு தர வேண்டும்.

என கோரிக்கை விடுத்தனர் முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்திக்கும் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கடத்தப்பட்ட மாணவியின் தாய் மற்றும் பாட்டி கண்ணீர் மல்க மாணவியை உடனடியாக மீட்க வேண்டும் என தரையில் அழுது புரண்ட சம்பவம் அங்கு இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

மாணவியை கடத்திச் சென்ற மணி முருகன் என்ற டப்பாமணி மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் மற்றும் கஞ்சா விற்பனை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது

What do you think?

மேல்மலையனூர் அக்னி குளத்தை சீரமைக்க அதிகாரிகள் ஆய்வு

திருநாள் கொண்டச்சேரி கிராமத்தில்  பொன்னம்மா காளியம்மன் ஆலய  மஹா கும்பாபிஷேகம்