மேல்மலையனூர் அக்னி குளத்தை சீரமைக்க அதிகாரிகள் ஆய்வு
அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் கோயில் நிர்வாகம் முடிவு
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயம் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும்
இத்திருந்தலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்லும் நிலையில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் மூலம் தொடர்ந்து பல கட்டங்களாக செய்து வருகின்ற நிலையில்.

பக்தர்கள் அதிகளவு பயன்படுத்தக்கூடிய அக்னி குளமானது துணிக்கழிவுகளாலும் பாறை கற்களாலும் முள் செடிகளாலும் சூழ்ந்து காணப்படுவதால் இக்குளத்தில் அமாவாசை தினங்களில் பக்தர்கள் இரவு நேரங்களில் புனித நீராடும் போது உயிரிழப்புகள் அதிகளவு ஏற்பட்டு வந்த நிலையில் கோயில் நிர்வாகம் மூலம் குளத்தை சீர்படுத்தி குளத்தில் உள்ள கழிவுகள் மற்றும் குளத்தில் உள்ள பாறைகளை அகற்றி படிக்கட்டுகளை அமைத்து பக்தர்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆய்வினை மேற்கொண்டனர்.


