செஞ்சி அடுத்த அஞ்சாஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சோலைவாழி அம்மன் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா –
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அஞ்சாஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சோலைவாழி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன், ஆலய ஜூரணோ தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோயில் எதிரே யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு தேவாத அனுக்கை, விக்னேஸ்வர பூஜை,மஹா கணபதி ஹோமம், பூர்ணாஹீதி, வாஸ்து சாந்தி,பிரவேசபலி, அங்குரார்பணம், மிருத்சங் கிரஹணம், மிருத்சங்கிரஹணம், கும்ப அலங்காரம்,முதல் காலை யாக சாலை பூஜை, மஹாபூர்ணாஹீதி யாக குண்டத்தில் சமர்ப்பித்து தீப ஆராதனை உடன் கலசங்கள் எழுந்திருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க திருக்குடங்கள் புறப்பாடு தொடர்ந்து புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க ஸ்ரீ மாரியம்மன் கோபுரம் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியை காண அஞ்சாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது,
அதனைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலச புனித நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.

கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்ட போது மேகத்தில் சூரியன் வட்டமிட்டது போல் காட்சி அளித்ததும் மேலும் கோவிலின் கோபுரத்தின் மேலே மேகத்தில் கருடன் வட்டமிட்ட காட்சியை கண்டதும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோசங்கள் எழுப்பி வணங்கினர்.
தொடர்ந்து கோயில் நிர்வாகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அஞ்சாஞ்சேரி கிராம பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.


