in

செஞ்சியில் புத்தகக் கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா

செஞ்சியில் புத்தகக் கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட ராஜேந்திரன் நகர் 6-வது தெருவில், அதிதி புத்தகக் கடை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

அதிதி புத்தகக் கடை நிறுவனர் கே மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் கலந்து கொண்டு, எழுத்தாளர் செஞ்சி தமிழினியன் எழுதிய «ஊத்தாம் பல்லா» நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊத்தாம் பல்லா பதிபக நூலை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் வெளியிட செஞ்சிக்கோட்டை நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் வழக்கறிஞர் சக்கிராஜன் நூலை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வீ.ஆர்.டைரி பால் பண்ணை உரிமையாளர்
வி.ஆர். பிரித்விராஜ், வருவாய்த்துறை ஆய்வாளரும் மக்கள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் கண்ணன், உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புத்தகங்கள் சமூக முன்னேற்றத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை வலியுறுத்தி புத்தக எழுத்தாளர்கள் தெரிவித்தனர்.

What do you think?

சிதம்பரத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த 25 வயது பெண் வெட்டி படுகொலை 

பட்டணபிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனம் திருஆபரணங்கள் பூண்டு தங்க கொரடு பாதரட்சை, கமலம் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள்