திருவாடானை அரசு மருத்துவமனையில் குடிநீர் இன்றி நோயாளிகள் அவதி
திருவாடானை அரசு மருத்துவமனையில் குடிநீர் இன்றி நோயாளிகள் அவதி: அமைச்சர் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை எனப் புகார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும் 10th மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு கடந்த சில மாதங்களாகக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு வருகை தந்த சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், நோயாளிகளின் நலன் கருதித் தனது சொந்தச் செலவில் குடிநீர் வசதி செய்து தருமாறு அங்கிருந்த தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சரின் உத்தரவையடுத்து, மருத்துவமனையில் குடிநீர் ஊற்றி வைப்பதற்கான பிரத்யேகக் கொள்கலன்கள் (Water Dispensers) வைக்கப்பட்டன. ஆனால், அவற்றில் தற்போது வரை தண்ணீர் நிரப்பப்படாமல் வெறும் பாத்திரங்கள் மட்டுமே காட்சிப் பொருளாக உள்ளதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், ஒரு சில இடங்களில் உள்ள குடிநீர் கொள்கலன்கள் சரியாக மூடப்படாமல், சுகாதாரமற்ற முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் அவர்தம் உறவினர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இலவசமாக சிகிச்சை பெற்ற பெற வரும் மருத்துவ பயனாளிகள் பணம் கொடுத்து குடிதண்ணீர் வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது எனவே, திருவாடானை அரசு மருத்துவமனையில் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பு: நாளை திருவாலானை பகுதிகளுக்கு சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் விகே ராஜிவ் வர உள்ளார்.

