in

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை மூடி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை மூடி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

 

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை மூடி பொதுமக்கள் முற்றுகை போராட்டம். புதுச்சத்திரத்தில் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார். டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் எச்சரிக்கை.

சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. புதுச்சத்திரத்தில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் இந்த கடை அமைந்துள்ளது. இந்த கடையால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே பள்ளிக்கூடம் ஒன்றும் உள்ளது. மேலும் ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ரயில் நிலையத்திற்கு செல்லும்போது டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை கடை மூடப்படாமல் உள்ளது. இதைக் கண்டித்து இன்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மதியம் 12 மணியளவில் ஊழியர்கள் வந்து டாஸ்மாக் கடையை திரண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கடையை மூடி டாஸ்மாக் கடைக்கு முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பி டாஸ்மாக் கடை முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும். இதற்கான உறுதிமொழியை அதிகாரிகள் அளிக்க வேண்டும் எனக் கூறினர்.

What do you think?

பரங்கிப்பேட்டையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்

வேடசந்தூர் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு