in

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா ஸ்ரீ விநாயகர் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா ஸ்ரீ விநாயகர் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தின் அருள்மிகு நெல்லையப்பர் ஸ்ரீ காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும் ஆனி பெருந்திருவிழா பிரசித்தி பெற்றது. 48½ நாள் நடைபெறும்.

இந்த திருவிழாவில் முன்னோடியாக ஊர் காவல் தெய்வமான பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த மே மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

அதனை தொடா்ந்து ஆனித் திருவிழா பந்தக்கால் நடுதல் கடந்த மே 29ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவிலில் அலங்காரபந்தல் அமைத்தல் தேர் செப்பனிடுதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரசித்திபெற்ற ஆனிபெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்வாக விநாயகா் கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மூலஸ்தானத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விநாயகர் கொடியேற்றம் நடைபெற்றது. 5½ நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் உட்பிரகாரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.

இந்தத் திருவிழாவை தொடர்ந்து முதலில் மூவர் திருவிழா 6 நாட்களும் அதன்பின்னா் வரும் 6 நாட்கள், சந்திரசேகர் பவானி அம்பாள் திருவிழாவும் நடைபெறும்.இந்த விநாயகா் திருவிழா கொடியேற்றத்தை தொடா்ந்து ஆனிப்பெருந்திருவிழாவிற்காக அழைப்பிதழ் அச்சடித்தல், பந்தல் அமைக்கும் பணி துவக்குதல், தேர்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இன்று முதல் தொடங்கப்பட இருக்கின்றன.ஆசியாவிலேயே அதிக எடைகொண்ட நெல்லையப்பர் தேர் ஓடும் பிரசித்திபெற்ற ஆனித் தேர்திருவிழா வரும் 28 ம் தேதி நடைபெறுகிறது.

What do you think?

அருகன்குளம் காட்டு ராமர் கோயில் வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்

திருச்சி துறையூரில் உள்ள சார்பதிவாளர் (பத்திரப்பதிவு) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை