in

சாலை விபத்தில் இறந்த தலைமை காவலர் சடலம் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்


Watch – YouTube Click

சாலை விபத்தில் இறந்த தலைமை காவலர் சடலம் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்5

திருச்சி மாவட்டம் முசிறி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தவரின் சடலம் முசிறி காவிரி ஆற்று பகுதியில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொட்டியம் அடுத்த தோளூர்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த காராளன் மகன் மகாமுனி (45), இவர் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2003 ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தவர், திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 21 ஆண்டுகள் பணியாற்றி தற்போது முசிறி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர், கடந்த சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தவரை, உடன் சென்றவர்கள் உதவியுடன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார், உயிரிழந்த காவலர் மகாமுனி சடலம் கோயம்புத்தூரில் இருந்து முசிறியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது சடலம் முசிறி நகரில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முசிறி காவிரி ஆற்று பகுதியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமையில் ஆயுதப்படை சேர்ந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 13 காவலர்கள் உதவியுடன் 30 குண்டுகள் முழங்க தலைமை காவலர் மகாமுனி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் முசிறி காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு ஒரு குழந்தை பலியான நிலையில் சுகாதாரப் பணிகள் தீவிரம்….