in

முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை


Watch – YouTube Click

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை கலைஞர் சிலை உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில்..,

திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது.

திமுக சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை இன்று காலை வெளியிட்டார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை இந்த முறையும் போட்டியிடுவார் என தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி என் அண்ணாதுரை இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முழு உருவ சிலக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
.

தொடர்ந்து நகரின் முக்கிய வீதியில் வழியாக பெரியார் சிலை அண்ணா சிலை காமராஜர் சிலை உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடும் விமர்சனம்

சாலை விபத்தில் இறந்த தலைமை காவலர் சடலம் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்