ஆடி திருவிழா ஆறாம் நாள் திருவிழாவை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் ரத வீதிகளில் வீதி உலா.
ஆடி திருவிழா ஆறாம் நாள் திருவிழாவை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் ரத வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.
ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடித்திருக்கல்யாணம்,மாசி சிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆடித்திருக்கல்யாண நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த புதன்கிழமை காலை அம்மன்சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கன்னியலக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதன் பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.
இதில் நூற்றுகணக்கான உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
இந்த நிலையில் ஆறாம் நாள் திருவிழாவை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் ரத வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.
கோவில் யானை ராமலக்ஷ்மி, விநாயகர்,முருகன், முன்பு செல்ல ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் நான்கு ரத விதிகளாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது அங்கே திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அம்பாளை வணங்கி சென்றனர்.
ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் வரும் 16ந்தேதி நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து 12ந்தேதி ஆடி அமாவாசை, 13ந்தேதி தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மேலும், ஆடி திருக்கல்யாண திருவிழாவில் 1ம் நாள் திருநாள் முதல் 10ம் நாள் வரையிலும் பர்வதவர்த்தினி அம்பாள் புறப்பாடு ராமநாதசுவாமி கோயிலின் நான்கு ரதவீதிகளில் வீதி உலா நடைபெற்று வருகிறது.


