in

கதைக்கு பாடல் எழுத வேண்டாம் சதைக்கு பாட்டு எழுதுங்கள் என்கிறார்கள் சிநேகன் ஆதங்கம்

கதைக்கு பாடல் எழுத வேண்டாம் சதைக்கு பாட்டு எழுதுங்கள் என்கிறார்கள் சிநேகன் ஆதங்கம்…

 

கவிஞர் சினேகன் மக்கள் ஏன் நல்லதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தை வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.

ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நினைவெல்லாம் நீயடா’ என்ற படத்தின் நிகழ்ச்சியில் சினேகன் வருத்தமாக பேசியதாவது.

இப்படம் ஆதிராஜனின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இதில் நான் மூன்று பாடல்கள் எழுதி இருக்கிறேன், இதுவரை நான் 3000 பாடல்கள் எழுதி இருந்தாலும் கொஞ்சமாகத்தான் கமர்சியல் பாடல்கள் எழுதி இருக்கிறேன்.

என் படைப்பில் 500 பாடல்களாவது சிறந்த பாடல்களாக இருக்கும் எனது சிறந்த பாடல்களை சிலர் கண்டுகொள்ளாமல் நான் கமர்சியலாக எழுதிய பாடல்கள் மட்டும் விமர்சனம் செய்கிறார்கள்.

இதனால் என் மனம் வலிக்கிறது, நானும் கதைக்கு தான் பாடல் எழுத வேண்டும் என்று சென்னைக்கு ஓடி வந்தேன்.

இந்த சினிமா என்னை சதைக்கு பாடல் எழுதும்படி நிர்பந்தம் செய்கிறது என்னுடைய முதல் படத்திற்கே விருது வாங்கியவன் நான்.

இந்த சமூகம் ஏன் நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்ள மறுக்கிறது என்று வேதனையுடன் கூறினார்.

நீங்கள் நல்லதை மட்டும் செய்யுங்கள் சார் உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். பாரதி கூற்றுபடி அமிழ்தும் நஞ்சும் இந்த பூமியில்தான் பிறக்கின்றன, நல்லதை விதைத்து நஞ்சை அருப்போம்.

What do you think?

பிரபல சீரியலை நம்பி அடிவாங்கிய SUN Tv, TRP ரேட் ..டை ஏற்ற புது முயற்சி

தாறுமாறாகவும் அபத்தமாகவும் படம் எடுத்து சர்ச்சையில் மாட்டிக் கொள்வது.