தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாகப் பரவி வரும் அரசியல் தகவல்
பழனி நகரின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டும், அவருக்கு ஆதரவாகவும் “தலைவன் எவ்வழியே எங்கள் வழி”, “அரசியல் சூப்பர் ஸ்டார்” என்ற வாசகங்களுடன் பாஜக நிர்வாகிகளே போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.”
குறிப்பாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆதரவாளர்கள் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே கடந்த தேர்தலில் பழனி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காததால் மத்திய அமைச்சர் எல்.முருகனை முற்றுகையிட்டுப் போராடியவர்கள் ஆவர்.
பாஜகவில் தற்பொழுது பொறுப்பில் உள்ளவர்களே அண்ணாமலைக்கு ஆதரவாகத் தனிப் போஸ்டர் ஒட்டியிருப்பது திண்டுக்கல் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


