in

பண்ருட்டி அருகே மூதாட்டி வீட்டில் பீரோவை உடைத்து வெள்ளி மற்றும் 75 ஆயிரம் பணம் திருட்டு போலீஸ் தீவிர விசாரணை

பண்ருட்டி அருகே மூதாட்டி வீட்டில் பீரோவை உடைத்து வெள்ளி மற்றும் 75 ஆயிரம் பணம் திருட்டு போலீஸ் தீவிர விசாரணை

பண்ருட்டியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள், ரூ.75 ஆயிரம் திருட்டு; போலீசார் தீவிர விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி குமரன் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி வளர்மதி (65). தம்பதியருக்கு லலிதா என்ற மகளும், பாலாஜி என்ற மகனும் உள்ளனர். மகள் லலிதா அதே பகுதியில் வசித்து வருகிறார். மகன் பாலாஜி சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், வளர்மதி நேற்று காலை சுமார் 6 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு தனது மகன் பாலாஜியுடன் சென்னைக்கு சென்றிருந்தார்.

இன்று காலை லலிதா தனது தாயார் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.

இதையடுத்து, அவர் தனது தாயார் வளர்மதி மற்றும் சகோதரர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் வீட்டை சோதனை செய்ததில், பீரோவில் இருந்த வெள்ளி பூஜைப் பொருட்கள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி. ரகுபதி மற்றும் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் ‘கூப்பர்’ என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தனிப்படை போலீசாரும் அமைக்கப்பட்டு, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க சட்டப்பேரவையில் வலியுறுத்துவேன் – எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த்

செஞ்சியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்