in

பாலியல் புகார் எதிரொலி கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்


Watch – YouTube Click

பாலியல் புகார் எதிரொலி கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்

 

பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமின் அண்ணன் மகன் ஆவார்.

அண்மையில், பிரஜ்வால் ரேவண்ணா இருக்குப்படியான பாலியல் வீடியோ ஒன்று வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீதும் ஹாசன் பகுதி காவல்நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளது.

கர்நாடக அரசியலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஹாசன் தொகுதியில் மஜத சார்பில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா தான் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சமயத்தில் தற்போது இந்த வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணை செய்து வருகிறது. பிரஜ்வல் ரேவான்னா மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கைகள் வலுத்த நிலையில், இன்று தேவகவுடா தலைமையில் கட்சி ஒழுங்குமுறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தின் முடிவில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான எஸ்ஐடி விசாரணையை நாங்கள் (JDS ) வரவேற்கிறோம் என்றும், எஸ்ஐடி விசாரணை முடியும் வரை பிரஜ்வல் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய எங்கள் கட்சியின் தேசிய தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளோம் என மஜக கமிட்டி தலைவர் தேவேகவுடா கூறினார்.

மஜத கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி இது குறித்து கூறுகையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை முடியும் வரை பிரஜ்வல் ரேவண்ணா மஜக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை