in

பாஜக அவர்களுடன் ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு முகமூடி போட்டவர்களுக்கும் தக்க பதிலை அளிக்க வேண்டும்


Watch – YouTube Click

இந்தியா கூட்டணி திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி அம்பாசமுத்திரம் ஆலங்குளம். சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம். கூட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது.

இதில் திமுக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டி, தனபால், தென்காசி திமுக எம்எல்ஏ பழனி நாடார்,ஆலடி பூங்கோதை அருணா, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ,ரவிவர்ணன்,, முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் மீரான் மைதீன், மனித நேய கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் வள்ளல் பிரசாத் உள்பட கழக நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ராபர்ட் ப்ரூஸ் பேசுகையில்…

தமிழகத்திற்க்கு மோடி அவர்கள் நான்கு முறை அல்ல நாற்ப்பது முறை வந்தாலும் ஒன்றை தொகுதியை கூட வெல்ல முடியாது, தமிழகத்தில் ஓரே தாரக மந்திரம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மந்திர சொல் நிச்சயமாக நாற்பது தொகுதியில் வெல்லும் என தெரிவித்தார்.

மேலும் திருநெல்வேலி தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உருவாக்க பாடுபடுவேன் என்றும் தாமிரபரணி ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து வாணம்பார்த்த பூமியாக இருக்கும் இடத்திற்க்கு ஆற்று தண்ணீர் பயன்பட செய்வேன் என்றும், அம்பாசமுத்திரம் ரயில்வே கேட் அருகில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.தமிழகத்தில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பாடுபடவேண்டும் என தெரிவித்தார்

செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தங்கபாலு பேசும்போது, ஜாதி மற்றும் மதத்தால் பாஜக இந்தியாவை பிரிக்க பார்க்கிறது, 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையை ஏற்படுத்திய பாரதிய ஜனதா கட்சி ஜனநாயக நாட்டின் எந்த மாண்பையும் மதிக்காமல் சீரழித்து விட்டது, இந்த பாஜக ஆட்சி விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரான ஆட்சி, தொழிலாளர்களுக்கு எதிரான ஆட்சி, மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியை செயல்படுத்தும் ஆட்சி என கூறினார். 2 கோடி பேருக்கு மேல் வேலை அளிப்போம் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, இன்று இந்தியாவில் 22 கோடி பேர் வேலை இழந்து நிற்பதற்கு காரணமாக ஆகி இருக்கிறார் என கடுமையாக தாக்கினார். தொழிலாளர்களையும் பொது மக்களையும் மதிக்கும் ஆட்சியாக இருக்க வேண்டும் ,அத்தகைய நல்லாட்சியை தமிழக முதல்வரும் இந்திய கூட்டணியின் பெருந்தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அளித்து வருகிறார், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90% வாக்குறுதிகளை அவர் இதுவரை நிறைவேற்றி இந்தியாவில் நம்பர் ஒன் முதல்வராக திகழ்கிறார், இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக புகழாரம் சூட்டிய கே வி தங்கபாலு கன்னியாகுமரியில் ராகுல் காந்தி ஆரம்பித்த பாத யாத்திரையில் இந்தியாவின் தேசிய கொடியை கையில் எடுத்து கொடுத்தவர் மு க ஸ்டாலின், அதேபோல் பாதையாத்திரையை நிறைவு செய்த மும்பையில் ராகுல் காந்தி கொடியினை மு க ஸ்டாலின் இடம் கொடுத்து பதில் மரியாதை செய்ததை நினைவு கூர்ந்தார். நன்றியும் பாசமும் இயல்பாகவே இணைந்தது காங்கிரஸ் திமுக கூட்டணி, இது கொள்கை கூட்டணி இதன் மூலம் நமது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை உறுதி செய்து இது லட்சிய கூட்டணி என்பதை நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று நிரூபிப்போம் என்று கூறினார் முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தங்கபாலு. பிரதமர் மோடியால் தான் செய்தது என எதையும் கூறி வாக்கு கேட்க முடியவில்லை, மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாசிச சக்தியான ஆர்எஸ்எஸ் இன் வழிகாட்டுதல் படி தான் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது என தெரிவித்தார் தங்கபாலு.

செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய நெல்லையின் பொறுப்பு அமைச்சரும் மின்சாரம் நிதி மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தாமிரபரணியின் தலைவாசலில் நின்று உரையாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும், இரண்டு தொகுதிகளும் நெல்லை தென்காசி என இரண்டு மாவட்டங்களில் இருந்தாலும் அனைவர்களுடைய உணர்வும் ஒன்றாகவே உள்ளதற்கு சரியான உதாரணம் இந்த சங்கமம் தான் என்றும் குறிப்பிட்டார். 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாமிரபரணி நாகரிகத்தின் தொட்டிலில் நின்று இந்திய கூட்டணியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றுவது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தவர், தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் நான்காம் தேதி நாம் செயல்படுத்திய திட்டங்களின் வெற்றி நமக்கு முழுமையாக கிடைக்கும், இன்று நாம் சொன்னது அன்று உண்மை என நிரூபிக்கப்படும் என்றார். பாரத பிரதமராக மோடி மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், இந்திய மக்கள் அனைவருக்கும் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும் எனவும், முதல் முறையாக வாக்களிக்க போகும் இளைஞர்களுக்கு இந்த தேர்தல்தான் முதலும் கடைசியுமான தேர்தலாக இருக்கும் எனவும் ஆவேசத்துடன் குறிப்பிட்ட தங்கம் தென்னரசு, வேறு யாருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கோ ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கோ எந்த வாய்ப்பும் கிடைக்காது என்றார். மோடி மாதத்திற்கு நான்கு முறை அல்ல 40 முறை கூட தமிழகத்திற்கு வந்து போகட்டும், ஆனால் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி விட்டு அவர் தமிழகம் வந்தால் நாம் மகிழ்ச்சி அடைவோம், ஆனால் கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை வந்து பார்க்காத பிரதமருக்கு வாக்களிப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பினார். மேலும் வெள்ள நிவாரண பணிகளுக்காக பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு நயா பைசா கூட தராத மோடி எதற்காக தமிழகம் வந்து இப்பொழுது ஓட்டு கேட்கிறார் என கேள்வி எழுப்பிய தங்கம் தென்னரசு பாஜக மட்டுமல்ல அவர்களுடன் ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு முகமூடி போட்டவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள் ,அவர்களுக்கு நீங்கள் தக்க பதிலை அளிக்க வேண்டும் என அதிமுகவையும் பாமகவையும் மறைமுகமாக தாக்கினார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடைய கரத்தினை வலுப்படுத்தவும் இந்தியாவில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டி தமிழகம் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளையும் வென்றெடுக்க வேண்டும் என செயல் வீரர்கள் கூட்டத்தில் கூடியிருந்த திரளான கூட்டணி கட்சி தொண்டர்களிடையே கேட்டுக்கொண்டார் தங்கம் தென்னரசு.


Watch – YouTube Click

What do you think?

ஆப்கானிஸ்தானில் மீண்டும் கல்லால் அடித்து கொல்லும் தண்டனை அமல்

ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள் மோடி