in

கொடியேற்றத்துடன் தொடங்கிய அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா


Watch – YouTube Click

 

கொடியேற்றத்துடன் தொடங்கிய அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா

 

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல்லில் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்தரும் அபிராமிஅம்மன் உடனமர் அருள்மிகு பத்மகிரீஸ்வரர் திருக்கோவில்  உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி இந்த வருட சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ரிஷப ஹோமம், ஹெரி ஹோமம், நடைபெற்று கொடுமரத்திற்கு 16 வகையான அபிஷகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து ரிஷப கொடியினை சிவகன வாத்தியங்கள் முழங்க மிதுன லக்னத்தில் பத்மகிரீஸ்வரர் பிரியாவுடையம்மன், அபிராமியம்மன் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. பின்னர் சுவாமிக்கு அபிஷக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ்விழாவில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்று சென்றனர். 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் வரும்

21ம் தேதியன்று திருக்கல்யாணம் வைபவமும், 22ம் தேதியன்று சித்திரை திருவிழா திருதேராட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியினை காளகஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர்  வேலுச்சாமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சண்முகவேல், வீரக்குமார், நிர்மலா, மலைச்சாமி, செயல்அலுவலர் தங்கலதா, கோவில் தலைமை குருக்கள் குருநாதன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

ஆ .சிரமம் அருள்மிகு ஶ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷே விழா

பாராளுமன்றம் சென்று தயிர்சாதம் சாப்பிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதற்காக ஓட்டளிக்க வேண்டும்