கிராமத்தில் நடந்த அதிசயம் வீட்டு மாடியில் வந்து இறங்கிய ஹெலிகாப்டர்
திருக்களாச்சேரி கிராமத்தில் நடந்த அதிசயம் அற்புதம் வீட்டு மாடியில் வந்து இறங்கிய ஹெலிகாப்டர் சைக்கிள் ஓட்டிய குரங்கு தென்னை மரத்தில் தேங்காய் பறித்த குரங்கு முயல்களின் சேட்டை காளையை அடக்கிய வீரன் மாட்டு வண்டி பந்தயம் கிராமத்திற்கு வந்த ரயில் ஒரே இடத்தில் நடந்தது எப்படி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீத்தளா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

தீமிதி திருவிழாவை ஒட்டி கிராமம் முழுவதிலும் அலங்கார மின் விளக்குகளால் ஜொலித்தது இதில் கம்ப்யூட்டர் காலத்திலும் அலங்கார மின் விளக்குகளில் பல்வேறு அதிசய நிகழ்வுகளும் இடம்பெற்றது.

ஊர் சாலை நெடுகிலும் அலங்கார மின்விளக்குகளால் சைக்கிளில் தலையில் கரும்பு கட்டுடன் வாழைத்தாருடன் ஓட்டி செல்லும் தாத்தா, குரங்கு சைக்கிள் ஓட்டுவது, குரங்கு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பது, காளையை அடக்கும் இளைஞர், மாட்டுப் பந்தயம் ஓட்டும் இளைஞன், மாடியில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர், முயல்களின் சேட்டை சம்பவங்கள் கிராமத்திற்குள் வந்த ரயில் என வண்ண விளக்குகளால் வரலாற்றை நிகழ்த்திய சம்பவம் இரவு நேரத்தில் அத்தனையும் ஜொலித்தது பக்தர்கள் மெய்சிலிநது பார்த்து பார்த்து மொத்தத்தில் இளைஞர் ஒருவரின் கைவண்ணத்தில் திறமையால் நிகழ்ந்த மின்விளக்குகளின் சம்பவம் பலரும் பாராட்டு எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருக்களாச்சேரி கோவில் திருவிழா.


