in

கழிவுநீருடன் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி

கழிவுநீருடன் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி

 

செஞ்சியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கழிவுநீருடன் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி.

கால்வாயில் இருந்து மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறி செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக செஞ்சி நகரின் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, செஞ்சி காந்தி பஜார் மற்றும் நான்கு முனை கூட்ரோடு பகுதிகளில், கழிவுநீர் கால்வாய்களில் இருந்து வெளியேறிய கழிவுநீரும் மழைநீருடன் கலந்து சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும், கழிவுநீரும் மழைநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பொதுமக்கள் அதனை கடந்து நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், நகரின் முக்கிய பகுதிகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்குவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, செஞ்சி நகரில் கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி, மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் கலந்த வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் செஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

மழையை நம்பி நாகை மாவட்ட விவசாயிகள் சம்பா உழவுப் பணியில் தீவிரம்

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா