in

மழையை நம்பி நாகை மாவட்ட விவசாயிகள் சம்பா உழவுப் பணியில் தீவிரம்

மழையை நம்பி நாகை மாவட்ட விவசாயிகள் சம்பா உழவுப் பணியில் தீவிரம்


​மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், ஆற்றுப் பாசனத்தை பெருமளவில் நம்பியிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போனது.

இருப்பினும், வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது அரசு உரிய தண்ணீரைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தற்போது சம்பா ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

​நாகை மாவட்டத்தில் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் சம்பா சாகுபடியை முன்னிட்டு டிராக்டர்கள் மூலம் நிலங்களை உழுவது, வரப்புகளைச் சீரமைப்பது மற்றும் பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவது உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

​குறிப்பாக கீழ்வேளூர், தேவூர், திருக்குவளை, சாட்டியக்குடி, இறையான்குடி, சோழவித்தியாபுரம், பாலக்குறிச்சி, சிக்கல் மற்றும் செம்பியன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான உழவுப் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

வருடாந்திர பிரம்மோற்சவம் சூரிய பிரபை வாகனம்

கழிவுநீருடன் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி