ஆசிரியர் தின விழா நல்லாசிரியர்களுக்கு பாராட்டு
தஞ்சாவூரில் ஆசிரியர் தின விழா, இராமானுஜன் கணித மன்றம் மற்றும் தொன்மை மன்றம் தொடக்கம், நல்லாசிரியர்களுக்கு பாராட்டு.
டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து தஞ்சாவூர் கல்யாண சுந்தரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது, இவ்விழாவில் ராமானுஜன் கணித மன்றம் மற்றும் தொன்மை மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய நல் ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர், இங்விழாவில் மாவட்ட வள அலுவலர் ராஜ மகேஸ்வரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


