புதுச்சேரி …வ உ சி பிறந்தநாள் மற்றும் அன்னை தெரேசா நினைவு நாள் ஒட்டி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரத்தின் பிறந்தநாள் இன்று புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது..

சட்டமன்றம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்தியலிங்கம் எம்பி தலைமையில் காங்கிரஸ் ஆர் மாலை அணிவித்தனர்.. இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அன்னை தெரேசாவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன்,அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் இவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் ..


