in

செருதூர் மீனவ கிராம மீனவர்கள் போராட்டம்

செருதூர் மீனவ கிராம மீனவர்கள் போராட்டம்

 

வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் தங்கும் விடுதிகளின் கழிவுநீர் வெள்ளையாற்றில் விடப்படுவதை கண்டித்து செருதூர் மீனவ கிராம மீனவர்கள் 4-வது நாளாக போராட்டம்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் தங்கும் விடுதிகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக வெள்ளையாற்றில் விடப்படுவதால் கடல் மாசடைவதாக கூறி, வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராம மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 4-வது நாளாக தொடர்கிறது.

மேலும் இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் அவர்களிடம் கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி மீனவர்கள் மனு அளித்தனர்.

மீன்பிடி இறங்குதளத்தில் மனிதக் கழிவுகள் நேரடியாக கலப்பதால், பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்வதில் சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு தீர்வு காண வலியுறுத்தி செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் என செருதூர் மீனவர்கள் தெரிவித்தனர்.

What do you think?

செஞ்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு முன்பு சுமை தூக்கும் கூலி தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்.

பழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை