130 கிலோ திருக்கை மீன் சிக்கியது மகிழ்ச்சியில் மீனவர்கள்!
பாம்பன் தெற்கு கடற்கரையில் 130 கிலோ திருக்கை மீன் சிக்கியது மகிழ்ச்சியில் மீனவர்கள்!
பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் சுமார் 130 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட திருக்கை மீன் சிக்கியது.
வலையில் சிக்கிய திருக்கை மீனை கரைக்கு கொண்டு வர மீனவர்கள் முயன்றனர். ஆனால் அதிக எடை காரணமாக இரண்டு பேர் சேர்ந்து இழுத்தும் நகர்த்த முடியாத நிலையில், கடும் சிரமத்துடன் மீனை இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

சுமார் 130 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய அளவிலான மீன் கிடைத்தது மீனவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பாம்பன் தெற்கு கடற்கரையில் பிரம்மாண்ட திருக்கை மீன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.


