குன்றத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நடுத்தர மக்கள் போன்றவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து ஏராளமானோர் வருகின்றனர்
குன்றத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நடுத்தர மக்கள் போன்றவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து ஏராளமானோர் வருகின்றனர் இதில் நோயாளிகளுக்கு போதுமான வசதிகள் உள்ளதா என பொதுமக்களிடம் கேட்டதற்கு மருத்துவம் எல்லாம் நன்றாக இருக்கின்றது ஆனால் இங்கே ஆபத்தான நிலையில் உள்ளது. 10+10 அடி ஆழமுள்ள குழி ஒன்று உள்ளது

மற்றும் தகடுகள் ஆங்காங்கே ஆபத்து தரக்கூடிய வகையில் உள்ளது. மின்விசிறி அனைத்தும் நசுக்கப்பட்டு அபாய நிலையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. OP பிரிவு
காத்திருப்பு பகுதி மின்சார கேபிள் மற்றும் மெயின் போர்டு கைகளில் தொடும் அளவில் உள்ளன. மருத்துவமனையின் சுற்றியுள்ள பகுதியில் ஒரு சில இடங்களில் தூய்மை இன்றி காணப்படுகின்றது கட்டிடத் திறப்பு பலகை மீது பைப்பிலிருந்து தண்ணீர் தொட்டியபடி பாசை அடைந்து உள்ளது.
ஊடுகதிர் அறையில் கைப்பிடி ஆரம்பித்து அங்கு உள்ள அனைத்து கைப்பிடி கம்பிகள் மற்றும் பொதுமக்கள் அமரும் நாற்காலி வரை ஆபத்தான நிலையில் துரு பிடித்து காணப்படுகின்றது
. கழுவி நீர் தொட்டி முறையாக மூடப்படவில்லை. இது மட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் அவர்களின் முதல் பிறந்த குழந்தைகளை வெளியே விட்டு விட்டு விளையாடிக் கொண்டீர்கள் என கூறிவிட்டு மருத்துவரை சந்திக்க சென்று விடுகிறார்கள் குழந்தைகள் இவ்விடத்தில் ஆபத்து இருப்பது தெரியாமல் அவர்களும் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவு ஆபத்து நிறைந்த மருத்துவமனையில் அலட்சியம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை இத்துடன் அங்கு முதியவர் ஒருவர் மின்விசிறியின் சுச்சை தெரியாமல் அழுத்தி விட்டார் அங்கு திடீரென சட்டத்துடன் மின் உயர் நுழைக்கப்பட்ட வைப்பில் மின்விசிறி அடித்துக்கொண்டே இருந்தது அதைக் கண்ட பொதுமக்கள் சிறிது நேரம் அச்சம் அடைந்தனர் இதுபோல் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் இதை சரி செய்து தருமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
