ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
வாரணவாசி கிராமத்தில் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நூற்றுக்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயம் தீமிதி திருவிழா முன்னிட்டு வெள்ளியன்று ஸ்ரீ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து பந்தகால் நடும் நிகழ்வு காப்பு கட்டுதல் நடைபெற்று, கூழ்வார்த்தல் விமர்சையாக நடைபெற்று ஊரணி பொங்கல் வைத்தனர்.

மறுநாள் பதி போடுதல் அம்மன் வர்ணிப்பு அம்மன் கங்கை திரட்டுதலும், கிரக வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும், ஊர்வலம் வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வெகு விமர்சையாக ஆடிமாத திருவிழா நடைபெற்றது.
பின்னர் மாலை வான வேடிக்கைகள் ஒளிக்க, மேள தாளங்கள் முழங்க, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியதை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொதுமக்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.


