in

ரோகிணி நட்சத்திர சிறப்பு பூஜைகள்

ரோகிணி நட்சத்திர சிறப்பு பூஜைகள்

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோகுல் நகர் பகுதியில் அமைந்துள்ள ருக்மணி சமேத வேணுகோபாலசாமி கோவிலில் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை வேணுகோபாலசாமிக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன.

மாலை 4 மணியளவில் கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. ஹோமத்தின் நிறைவாக பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடும்ப நலம் மற்றும் வளம் வேண்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

What do you think?

ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்