ஆடி மாத 35வது ஆண்டு திருவிழா சிறப்பாக நிறைவு
ஓசூரில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 301 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை ஆடி மாத 35வது ஆண்டு திருவிழா சிறப்பாக நிறைவு
கிருஷ்ணகிரி மாவட்டம், பெங்களூர்–ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 35வது ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த 09 நாட்களாக பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது திருவிழாவையொட்டி தினந்தோறும் அதிகாலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

ஆடி மாத திருவிழாவின் 09 ஆம் நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் கோவில் வளாகத்தில் 301 திருவிளக்கு பூஜை பக்தி உணர்வுடன் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு திருவிளக்குகளை ஏற்றி, அம்மனை வழிபட்டு தங்களது குடும்ப நலன், ஆரோக்கியம், வளமான வாழ்க்கை மற்றும் உலக நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
திருவிளக்கு பூஜையையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் மற்றும் வண்ண மின் விளக்குகளால் கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் பக்திப் பாடல்களை பாடியும், அம்மனின் திருநாமங்களை முழங்கியும் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த ஏற்பாடுகளை. தர்மகர்த்தா வெங்கடேஷ், தலைவர் ரங்கண்ணா பாபு செயலாளர் ராஜூ, பொருளாளர் இராமநாதன், செல்வம், வேலு, ராமமூர்த்தி, ஆலய கமிட்டி உறுப்பினர்களான மணி, முருகன், குமார், மற்றும் சக்தி, உள்ளிட்டோர் செய்திருந்தனர்


