முசரவாக்கம் ஆடி மாத திருவிழா அம்மன் வீதி உலா
முசரவாக்கம் கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஆடி மாத திருவிழாவில் அம்மன் வீதி உலாவில் தவெக நிர்வாகி 1000 பேருக்கு அன்னதானம்……….
காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கிராமத்தி அருள்மிகு ஸ்ரீ கோட்டையம்மன், ஆனைகாத்த அம்மன், அடைஞ்சை அம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயங்களில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு காப்பு கட்டுதல் நடைபெற்று அதனை தொடர்ந்து கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது.
பின்னர் அம்மன் கிரக வீதி உலாவும் அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா விமர்சையாக நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமைக்காரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
வெகு விமர்சையாக நடைபெற்ற இவ்விழாவில் வெளிநாடு தமிழர் நல அமைச்சர் எஸ்பிகே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார், காஞ்சிபுரம் தவெக வடக்கு ஒன்றிய செயலாளர் மேல்கதிர்ப்பூர் சிவா ஆகியோர் ஆலோசனையில் யாதவர் தெரு பகுதியில் தவெக மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் கே.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் கோகிலா ஆகியோர் ஏற்பாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் இணை செயலாளர் கே.தினேஷ் ராஜ், கிளை பொருளாளர் என்.யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு.


