in

நடிகர் தனுஷ் தனது மகனுடன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்…..

நடிகர் தனுஷ் தனது மகனுடன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனுதினமும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிரபல நடிகர் தனுஷ் தனது மகனுடன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அண்ணாமலையார் கோவிலில் சம்மந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரத்தில் சாமி தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

What do you think?

மாகாளியம்மனுக்கு 10 டன் பழங்களால் சிறப்பு அலங்காரம்

காவிரி கடைமடை நாகையில் ஆடிப்பெருக்கு களையிழப்பு