தொண்டியில் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை இரண்டை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி மகா சக்தி புரம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவருக்கு சொந்தமான படகில் முனிஸ் இரண்டு மீனவர்கள் தொண்டி மகாசக்திபுரம் கடலுக்குச் சென்று வலையை எடுத்த போது வலையில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் தங்களது வலையில் அடுத்தடுத்து இரண்டு ஆமைகள் சிக்கி இருந்தது அதனை கண்ட மீனவர்கள் உடனடியாக வலையை அறுத்து பத்திரமாக மீண்டும் கடலுக்குள் இரண்டு ஆமைகளையும் விட்டனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அது தடை செய்யப்பட்ட ஆமை என்பதால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு படை அறிவுத்தலின்படி மீனவர்கள் பத்திரமாக நீண்ட நேரம் போராடி வலையை அறுத்து மீட்டு கடலில் விட்டனர். வலையில் சிக்கிய ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரம் வலை சேதமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்


