பைக்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து: பாண்டிச்சேரியைச் சேர்ந்த பெயிண்டர்கள் இருவர் பலி! விபத்து ஏற்படும் முன் நிலைத்தடுமாறி செல்லும் பரபரப்பு வீடியோ காட்சிகள்
பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களான பத்ரிஸ் (32) மற்றும் முருகன் (27) ஆகிய இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேதாரண்யத்தில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த தனியார் கல்லூரி பேருந்தும், இவர்களது மோட்டார் சைக்கிளும் பூவைத்தேடி அருகே நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் பத்ரிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழையூர் காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த முருகனை மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முருகன், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து ஏற்படும் முன் சாலையில் மது போதையில் நிலை தடுமாறி செல்லும் பரபரப்பு வீடியோ காட்சிகள் அவ்வழியே காரில் சென்றவர் வீடியோ எடுத்த காட்சிகளைக் கொண்டு
குறித்து கீழையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


