அமைச்சர்களுக்கு இலாகா வரும் போது வரும்: முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியிலிருந்து தேசிய மாணவர் படையினர் கடல்சாகச பயணம் மேற்கொள்கின்றனர். சென்னை வரை மேற்கொள்ளப்படும் இந்த பயணத்தில் 5 குழுக்கள் ரிலே முறையில் பங்கேற்கின்றன. புதுச்சேரியிலிருந்து 3 படகுகளில் 21 மாணவர்கள் இந்த பயணத்தை கடலுார் வரை மேற்கொள்கின்றனர்.
அங்கிருந்து மற்றொரு குழுவினர் ராமேஸ்வரம் வரையும், அங்கிருந்து மற்றொரு குழு துாத்துக்குடிக்கும் அங்கிருந்து சென்னைக்கும் வரை மற்றொரு குழுவினர் பயணம் செய்கின்றரனர். மொத்தம் 5 குழுக்களில் 100 மாணவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பயணத்துக்கு பொறுப்பு அதிகாரியாக செந்துார்சன் பயணம் செய்கிறார்.
இந்த பயணம் செப்டம்பர் 27ந் தேதியுடன் நிறைவடைகிறது. கடல்சாகச பயணத்தை கொடியசைத்து முதல்அமைச்சர் ரங்கசாமி தொடங்கி
நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், எம்எல்ஏ அய்யப்பன், என்சிசி அதிகாரிகள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்து வந்த முதல்அமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள்
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு கொடுத்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லையே என்று குறித்து கேட்டதற்கு வரும். வரும். போது வரும் என்று கூறினார்.
பாஜக முக்கிய இலாக்கா கேட்டு அழுத்தம் தருகிறதா என கேட்டதற்கு பதில் தராமல் வணக்கம் என புறப்பட்டார்.
பின்னர் நடந்து வரும்போது அவர் தற்காலிக சபாநாயகர் அன்பழகனிடம்,
ஏதாவது பேசினால் வம்பாகிவிடும்.. பிறகு அதை சரி செய்வதற்கு முடியாது எனக் கூறினார் .அடுத்து,எந்த நேரத்தில் கணக்கு தீர்க்க வேண்டுமோ அப்போது தீர்க்க வேண்டும். என முதல்வர் குறிப்பிட்டார்.. அவர் யாரை குறிப்பிட்டார் என தெரியவில்லை..


