in

ஆடி மாத முதல் சனிக்கிழமை சனீஸ்வர பகவான் தரிசனம்

ஆடி மாத முதல் சனிக்கிழமை சனீஸ்வர பகவான் தரிசனம்

 

ஆடி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு தமிழகத்தில் திருநள்ளாறு என்று அழைக்கப்படும் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தோஷங்களை கழித்து சாமி தரிசனம் வழிபட்டு வருவது வழக்கம் இந்த ஆண்டு ஆடி மாத முதல் சனிக்கிழமை விழா இன்று தொடங்கப்பட்டது.

தமிழகத்தின் திருநள்ளாறு என்று அழைக்கப்படும் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலானது தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா குச்சனூரில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவிலில் சனி தோஷங்கள் விலகு வதற்காகவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் காக்காய் உருவம் பதித்த சிலைகள் எல் சோறு வைத்து சனீஸ்வர பகவானை வணங்குவர்.

தொடர்ந்து சனீஸ்வர பகவான் திருக்கோவில் முன்பாக உள்ள நதிக்கரையில் தண்ணீர் வராததால் கோவில் நிர்வாகம் சார்பில் செயற்கை நீரூற்று வைத்து பக்தர்கள் தலைமுழுகி தங்களது தோஷங்களை கழித்து வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் சனீஸ்வர பகவான் திருக்கோவிலுக்கு வருகை தந்து தங்களுக்கு பிடித்த ஏழரை நாட்டு சனியை போக்குவதற்காகவும் தோஷங்கள் விளங்குவதற்காகவும் விளக்கு வைத்து சனீஸ்வர பகவானே வேண்டி வருகின்றனர்.

தொடர்ந்து சுரபி நதியில் தண்ணீர் வராததால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் வந்து சென்றனர்.

What do you think?

பரமத்தி வேலூர் சனீஸ்வர பகவான் அபிஷேக ஆராதனை

பழனி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தங்களது 3 ம் நாள் விசாரணையை தொடங்கியுள்ளனர்