சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வாகன ஓட்டிகள் அவதி
தரங்கம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி காரைக்கால் சாலை என்பது முக்கிய பிரதான தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது.
சென்னை சிதம்பரம் வழியாக தரங்கம்பாடி காரைக்கால் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில் தரங்கம்பாடி அருகே ராஜூவ்ரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
மேலும் ராஜூவ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பொறையார் பேருந்து நிலையம் செல்லும் வளைவு பகுதியில் சாலை பழுதடைந்து கொண்டும் குழியுமாக உள்ளதால் மழை நேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும் அந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
எனவே முக்கிய பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.


