in

காவிரியில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு ஆராட்டு விழா

காவிரியில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு ஆராட்டு விழா

 

நாமக்கல் மோகனூர் ஶ்ரீ இரட்டை பிள்ளையார் ஶ்ரீ சபரி தர்ம சாஸ்தா சேவா அறக்கட்டளை காவிரியில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு ஆராட்டு விழா.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஸ்ரீ இரட்டை பிள்ளையார் ஸ்ரீ சபரி தர்ம சாஸ்தா ஆலயத்தில் கார்த்திகை மாதம் 11ஆம் நாள் (27.11.2026), வெள்ளிக்கிழமை, ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பனுக்கு காவிரி ஆற்றின் கரையில் இன்று காலையில் ஐயப்ப சுவாமிக்கு பஞ்சாமிர்தம் தேன் பழ வகைகள் பால் தயிர் மஞ்சள் சந்தனம் திருமஞ்சனம் பச்சரிசி மாவு கரைசல் நெய் சொர்ண அபிஷேகம் கலச தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை நடு காவேரியில் ஆராட்டு விழாவில் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா என பக்தி கோஷத்துடன் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

பின்னர் ஐயப்ப சுவாமிக்கு மலர் மாலைகள் அணிவித்து கற்பூர மகா தீபம் காண்பிக்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ இரட்டை பிள்ளையார் ஸ்ரீ சபரி தர்ம சாஸ்தா சேவா அறக்கட்டளையின் தலைவர் நாமக்கல் சக்தி குரூப்ஸ் R செந்தில்குமார்மற்றும் அனைத்து ஐயப்ப பக்தர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை வழிபாடு செய்தனர்.

What do you think?

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வாகன ஓட்டிகள் அவதி

செஞ்சி முருகன் திருக்கோவில் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு