in

தஞ்சை பெரியகோவில் மஹாவாராஹி அம்மன் குங்குமம் அலங்காரம்

தஞ்சை பெரியகோவில் மஹாவாராஹி அம்மன் குங்குமம் அலங்காரம்

 

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு 24 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது 3 ஆம் நாளான இன்று குங்குமம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் மஹாகணபதி ஹோமத்துடன் சிறப்பாக துவங்கிய நிலையில் 3 வது நாளான இன்று குங்குமம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரனை காண்பிக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.

What do you think?

வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டு திருவிழா தேர்பவனி

பட்டுக்கோட்டை அருகே வித்தியாசமான தூக்குத் தேர் திருவிழா